Connect with us

தமிழ்படம் 2.0 – படத்தின் டைட்டிலை மாற்றிய படக்குழு

News

தமிழ்படம் 2.0 – படத்தின் டைட்டிலை மாற்றிய படக்குழு

 beeebd22abff0def05a239b0efa76ea2

தமிழ்ப்படம் முதல் பாகத்தை இயக்கிய சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் உருவாகி வரும் தமிழ்ப்படம் 2.0 படத்தின் டைட்டிலை படக்குழு மாற்றியுள்ளது. இந்த படத்தின் டைட்டில் தற்போது ‘தமிழ்ப்படம் 2’ என மாற்றப்பட்டுள்ளது.

டைட்டில் மாற்றம் குறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

`ஜுரோவிற்கு மதிப்பில்லை என்பதால், தலைப்பில் இருந்து ஜுரோவை மட்டும் நீக்குகிறோம். எனவே படத்தின் தலைப்பு இனிமேல் தமிழ்ப்படம் 2 என்றே அழைக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

ed7eefd1ce232abfd4e16e580840b26c-2இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ‘காலா’ படத்தின் டீசரை விட பெரும் வரவேற்பு பெற்றது. அதேபோல் இந்த படத்தின் வித்தியாசமான புகைப்படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சினிமா மற்றும் அரசியல் குறித்த நிகழ்வுகளை படக்குழு அவ்வப்போது கலாய்த்து புகைப்படங்களை வெளியிட்டு வருவது இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

சிவா, திஷா பாண்டே, சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் படம் வருகிற ஆகஸ்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top