வெள்ளம் மற்றும் கொரோனாவை கட்டுப்படுத்த அட்வைஸ் கொடுக்கும் தமிழிசை;

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் புதுச்சேரி மற்றும் தமிழகத்திலுள்ள பல பகுதிகள் மழை நீருக்குள் மூழ்கி உள்ளது.

pralayam

இந்த நிலையில் தேங்கி நிற்கின்ற மழைநீர் வடிகால் முறையில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இது குறித்து புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளரை சந்தித்து பேட்டி அளித்துள்ளார்.

அதன்படி வெள்ளத்தை கட்டுப்படுத்த உரிய கட்டமைப்பை அனைத்து அரசுகளும் ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் தமிழிசை சவுந்தரராஜன். அதோடு ஆப்பிரிக்காவில் பரவி வரும் மிக வீரியமிக்க கொரோனாவான ஒமைக்ரான் கொரோனா பற்றி சில நம்பிக்கை அளிக்கும் தகவலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

கொரோனா

அதன்படி 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டால் எந்த வகை கொரோனா கட்டுப்படுத்த முடியும் என்று துணைநிலை ஆளுநர் கூறினார். தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் மறுப்பதாக வெளியான தகவல் அனைத்தும் கவலை தருகிறது என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment