Connect with us

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் தமிழர்கள்! தனுஷ்கோடி வருகை;

Sri Lanka

செய்திகள்

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் தமிழர்கள்! தனுஷ்கோடி வருகை;

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் தமிழர்கள்! தனுஷ்கோடி வருகை;

உலக நாடுகளின் பட்ட கடன் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் நெருக்கடி உள்ளது. அங்கு பணவீக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கையில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நிலவுவதாக காணப்படுகிறது. எனவே இலங்கைத் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் அடைய நுழைகின்றனர். அதுவும் குறிப்பாக நம் தமிழகத்தில் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு படை அதிகமாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கடல் வழியாக இலங்கை மக்கள் அகதிகளாக தமிழகத்திற்குள் நுழைகிறார்கள் என்பதை கண்டறிய இத்தகைய முயற்சி செய்வதாகவும் காணப்படுகிறது. இந்த நிலையில் இலங்கை தமிழர்கள் 4 பேர் தனுஷ்கோடி வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் இருந்து அகதிகளாக 4 தமிழர்கள் தனுஷ்கோடி வந்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து தனுஷ்கோடிக்கு 2 குழந்தைகளுடன் வந்த தலைவர்களான பெற்றோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே இலங்கையில் இருந்து இரண்டு குடும்பத்தை சேர்ந்த 16 பேர் வந்த நிலையில் அகதிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top