பொதுத்துறை பணி நியமனங்களில் தமிழர்களுக்கு வாய்ப்பு: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

ஒன்றிய அரசு மற்றும் பொதுத்துறை பணி நியமனங்களில் தமிழ்நாட்டினருக்கான வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

நாட்டின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் போதுமான பணிகளை வழங்குவதன் மூலம் சிறந்த சேவைகளை உறுதி செய்திட முடியும் எனவும், ஒன்றிய அரசு மற்றும் ஒன்றிய பொதுத்துறை பணி நியமனங்களில் அவர்களது விருப்பத்தினை நிறைவேற்ற முடியும் என அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அதே போல் ஒன்றிய அரசு பொதுத்துறை பணி நியமனங்களில் தமிழ்நாட்டினருக்கான வாய்ப்பினை உறுதி செய்திட வேண்டும் என பல்வேறு நலச் சங்கங்கள் அரசியல் கட்சியினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

அதே சமயம் 4.5% மட்டும்ர்ர் தென் மண்டலத்தை சேர்ந்த தகுதியானவர்கள் என்பதை சுட்டிக்காட்டிய தமிழக முதல்வர் ரயில்வே பணியாளர் தேர்வாணையத்தில் பெரும்பாலோனோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அல்ல என்பதை குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய நிகழ்வு இளைஞர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்துவதால் ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையம் தேர்வுகளை தமிழில் நடத்த வேண்டும் என்றும் 20 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் நேரடி நியமனங்களை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.