Entertainment
டிக்.டிக்.டிக். படத்தையும் விட்டு வைக்காத தமிழ் படம் 2
சிவா நடிப்பில் இயக்குனர் சி.எஸ். அமுதன் இயக்கியுள்ள தமிழ் படம் 2 திரைப்படம் ரஜினியின் ‘2.0’ உள்பட கலாய்க்காத படங்களே இல்லை என்ற அளவுக்கு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. அதேபோல் உள்ளூர் ஓபிஎஸ் முதல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரை இந்த படத்தில் கலாய்க்கபப்ட்டுளனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சில தினங்களுக்கு முன்னர் வெளியான டிக்.டிக்.டிக். என்ற படத்தில் உள்ள காட்சிகளை கேலி செய்யும் வகையில் அமைந்துள்ளது.
அதில் ஜெயம் ரவி போல் விண்வெளி உடையணிந்து விண்வெளியில் சீட்டாட்டம் விளையாடுவது போல் அந்த போஸ்டரில் உள்ளது. தற்கால சினிமா, அரசியல் என ஒன்றையும் விட்டு வைக்காமல் கலாய்ப்பதால் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
