தமிழக அரசின் விருது-ஒன்பது பேருக்கு வழங்கிய முதல்வர்!!

பொதுவாக பொங்கல் வந்து விட்டால் தமிழக கவிஞர்கள், கலைஞர்களை நினைவு கூறும் வண்ணமாக விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில் இன்றைய தினம் சுமார் 9 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதலில் அவர் திருவள்ளுவர் தினத்தை ஒட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள சிலைக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர் 2023 ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருதினை ரணியன் பொன்னுசாமிக்கு பாராட்டி வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின். மேலும் 2022 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் விருதுகளை ஒன்பது பேருக்கு வழங்கினார் மு.க.ஸ்டாலின்.

அதன்படி பேரறிஞர் அண்ணா விருது உபயதுல்லா கவிஞருக்கு வழங்கப்பட்டுள்ளது. காமராஜர் விருது இ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. பாரதியார் விருது வெங்கடாசலபதிக்கும், பாரதிதாசன் விருது வாலாஜா வல்லவனுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

திரு.வி.க.விருது நாமக்கல் வேல்சாமிக்கு வழங்கப்பட்டுள்ளது. கி.ஆபெ.விசுவநாதம் விருது கவிஞர் மு.மேத்தாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. பெரியார் விருது கவிஞர் கலி பூங்குற்றனுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அம்பேத்கர் விருது ராஜதுரைக்கு வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின். வள்ளுவர் கோட்டத்தில் தேவநேய பாவாணர் விருதை முனைவர் மதிவாணனுக்கு வழங்கி கௌரவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

விருதாளர்களுக்கு இரண்டு லட்சத்திற்கான காசோலை, சான்றிதழ் மற்றும் ஒரு சவரன் தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டுள்ளது. வள்ளலார் பல்லுயிர்காப்பகம் திட்டத்தில் ஐந்து தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.