#Breaking புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையில்லை ஆனால்… அமைச்சர் மா.சு. அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மாண்டஸ் புயல் காரணமாக, சென்னை சைதாப்பேட்டை 168 வது வார்டு நெருப்பு மேடு பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவர் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து 4 லட்சம் ரூபாயை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வழங்கினார்.

தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையில்லை என தெரிவித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், புத்தாண்டு கொண்டாட்டங்கள், தியேட்டர்கள், திருமண நிகழ்வு, திருவிழாக்கள் போன்றவற்றில் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை சுயகட்டுப்பாட்டுடன் மக்கள் பின்பற்ற வேண்டும். நிகழ்ச்சிகள் மகிழ்ச்சிக்காக தான் கொண்டாட வேண்டும் என கோருக்கை விடுத்துள்ளார்.

தற்போதைய சூழலில் கட்டுப்பாடுகள் பொதுமக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் பிஎப்.7 உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவும் தன்மை உடையது என்பதாலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் விதிகளை சுயகட்டுப்பாட்டுடன் முறையாக பின்பற்ற வேண்டும். அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்விடுத்தார்.

இதுபற்றி அவர், புத்தாண்டு, அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட எதற்கும் கட்டுப்பாடுகள் இல்லை. எனினும், பொதுமக்களுக்கு சுயக்கட்டுப்பாடு என்பது அவசியம் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். முன்னதாக, புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.