முல்லைப் பெரியாறு அணையில் படகில் சென்று தமிழக அமைச்சர்கள் ஆய்வு!!

தற்போது கேரளா தமிழகத்திற்கு பெரும் பிரச்சனையாக காணப்படுவது முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு பற்றி தான். இது குறித்து உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. இந்த நிலையில் சில தினங்களாக கேரள அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் முல்லைப் பெரியாறு அணையில் பார்வை மேற்கொண்டனர்.துரைமுருகன்

இதுகுறித்து தமிழக அரசின் அமைச்சர்களும் முல்லை பெரியாறு அணையில் ஆய்வு செய்ய வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட எம்பி பாரிவேந்தர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதனை தொடர்ந்து தற்போது முல்லைப் பெரியாறு அணையில் தமிழக அமைச்சர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி முல்லைப் பெரியாறு அணையில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அமைச்சர்கள் குழு நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறது.

அமைச்சர் பெரியசாமி, மூர்த்தி, சங்கராபாணியும் படகில் சென்று முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138.50 அடியை கடந்த நிலையில் தமிழக அமைச்சர்கள் முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு செய்து வருகின்றனர்.

அணை நீர்மட்டத்தை 142 அடி வரை தேங்காமல் கேரள அரசுக்கு நீர் திறந்து விட்டதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தற்போது ஆய்வு மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment