‘ஆசிர்வதிக்கப்பட்ட மாநிலம் தமிழகம்’; ஆன்மிகத்திலும் அறிவியல்-இதனால்தான் கோவில்களில் குளம் கட்டப்பட்டுள்ளது: தலைமை நீதிபதி அமர்வு
தமிழகத்தில் அதிக அளவில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகின்றன. இதனை தடுக்கும் விதமாக ஒவ்வொரு முறையும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வருகிறது. அதன்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில் ஆக்கிரமிப்புகளை வரன்முறைபடுத்துவதை அனுமதிக்க முடியாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு மாற்று இடத்தில் குடியமர்த்த நடவடிக்கை ஏற்று, ஆக்கிரமிப்பு நிலத்தை காலி செய்வதாக உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. பெத்தேல் நகர் குடியிருப்போருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
நீர்நிலை ஆக்கிரமிப்புகளே மழைகால வெள்ளத்திற்கு கோடைகால பஞ்சத்திற்கு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கூறியது. பெத்தேல் நகரில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டது.
2839 ஆக்கிரமிப்பாளர்களின் விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன, மாற்று இடம் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தரப்பு கூறியது. அதிக நீர் நிலைகளை கொண்ட ஆசிர்வதிக்கப்பட்ட மாநிலம் தமிழகம் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கூறியுள்ளது. தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது என திட்டமிட்டு ஒவ்வொரு கோவிலிலும் பழங்கள் கட்டப்பட்டுள்ளன என்று தலைமை நீதிபதி அமர்வு கூறியுள்ளது.
