Connect with us

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்

rain 1

தமிழகம்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்

தற்போது நம் தமிழகத்தில் வானிலை ஆனது கோடை காலத்தை போல் காணப்படுகிறது. ஏனென்றால் மே மாதம் முழுவதும் நம் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்தது. ஆனால் ஜூன் மாதம் தொடங்கிய முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்படுகிறது.

அதுவும் குறிப்பாக  வடதமிழகத்தில் வெயிலின்  தாக்கம் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இதன் மத்தியில் தற்போது வானிலை ஆய்வு மையம் ஒரு இதமான தகவல் ஒன்றை அறிவித்துள்ளது.

அதன்படி தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தற்போது வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த ஐந்து நாட்கள் தமிழ்நாடு புதுச்சேரி காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.

மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக அடுத்த 5 நாட்கள் தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் உள்ள சின்னக்கல்லார் பகுதியில் ஐந்து சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மேலும் சின்கோனா, பந்தலூர் பகுதியில் தலா 3 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சோலையாறு, வால்பாறை பகுதியில் தலா 2 மீட்டர் மழை பதிவாகி உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top