முக்கியமான செய்தி: மீண்டும் அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு; மீண்டும் தொடங்கி விட்டதா கனமழை?
2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முழுவதும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக காணப்பட்டது. அதன் பின்னர் மெல்ல மெல்ல வடகிழக்கு பருவமழையின் தாக்கம் குறைந்தது. 2021 ஆம் ஆண்டு மிகவும் ஆதிக்கம் செய்த வடகிழக்கு பருவமழை இரண்டு நாளுக்கு முன்பு தான் தமிழகத்தை விட்டு நகர்ந்து.
இதனால் தமிழகத்தின் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இவ்வாறு அறிவித்திருந்த நிலையில் தற்போது தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
ஏனைய இதர மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தலைநகர் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு அதாவது இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
