தொடர்ந்து கேலிக்குள்ளாகும் தமிழக அரசின் பொங்கல் பரிசான வெல்லம்

தமிழக அரசு பல்வேறு வகை பொங்கல் பொருட்களை வழங்குகிறது. இதில் பல சமையல் பொருட்கள் அடங்கி இருக்கிறது.

முக்கியமாக பொங்கல் செய்ய முக்கியமானது வெல்லம் எனப்படும் சர்க்கரையே ஆகும். தமிழக அரசு கொடுக்கும் பொங்கல் பை பரிசு பொருட்களுடன் இந்த வெல்லமும் கொடுக்கப்பட்டு வருகிறது.

சில இடங்களில் பொருட்கள் தரமில்லாமல் வருவதாக தொடர் புகார்கள் வருகின்றன. முக்கியமாக வெல்லம் உருகி ஒரு மாதிரியாக ஆகி விடுகிறது.

இந்த வெல்லத்தை வைத்துதான் சமூக வலைதளங்களில் அதிகமாக மீம்ஸ்கள் காமெடிகள் இடம்பெறுகிறது.

வெல்லம் உருகி அதன் தோற்றமே இல்லாமலும் சில இடங்களில் வெல்லத்தின் தோற்றம் அல்வா போல இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் அதிக கருத்துக்கள் பரவுகின்றன.

மற்ற பொருட்கள் உருகாது ஆனால் வெல்லம் அப்படியல்ல உருகிவிடும் என்பதால் அப்படி ஆகி விடுகிறது.

இருப்பினும் தரமற்ற பொருட்களை வழங்கினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றுதான் தமிழக அரசு கூறியுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment