இன்று முதல் அனுமதி; விஜய், அஜித் ரசிகர்களுக்கு அரசு கொடுத்த சர்ப்ரைஸ்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான வாரிசு மற்றும் துணிவு படங்களின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு சற்றுமுன் அனுமதி அளித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் முதல் 18ந்தேதி வரை சிறப்புக் காட்சிகள் திரையிட அனுமதி கேட்டு தமிழ்நாடு அரசுக்கு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.

அதில் ஏற்கனவே போகி பண்டிகை, பொங்கல், திருவள்ளுவர் தினம், காணும் பொங்கல் என 14-1-2023 முதல் 17-1-2023 வரை 4 நாட்கள் சிறப்பு காட்சிகளை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளதை சுட்டிக்காட்டினர்.

வரும் 12-1-2023, 13-1-2023 ஆகிய நாட்களிலும் மற்றும் 18-1-2023 தேதியிலும் சிறப்புக்காட்சி நடத்த அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தமிழ்நாடு அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் அதிகாலை 4 மணி மற்றும் 5 மணி காட்சிகள் 13-ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை சிறப்பு காட்சிகள் ரத்து என நேற்று முன் தினம் அறிவிப்பு வெளியானது.

தற்போது திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கையை ஏற்று பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான  புதிய படங்களுக்கான சிறப்பு காட்சிகளுக்கு  தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் 12, 13, 18 ஆகிய தேதிகளில் வழக்கமான காட்சிகளுடன், கூடுதலாக ஒரு காட்சியை திரையரங்குகளில் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.