ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு பேருந்து கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு பேருந்துகளில் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகள் டிக்கெட் கட்டணமில்லாமல் பேருந்தில் பயணம் செய்யலாம் என அரசிதழிலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மூன்று வயது வரை கட்டணம் இல்லை என்பதை தற்போது ஐந்து வயது வரை உயர்த்தி சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.
ஐந்து வயது முதல் 12 வயது வரை அரை டிக்கெட் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.