Connect with us

“குட்கா வழக்கு”…. மாஜி அமைச்சர்களை விசாரிக்க சிபிஐக்கு தமிழக அரசு அனுமதி!!

gutkha 2955 1524977319 1658288417

தமிழகம்

“குட்கா வழக்கு”…. மாஜி அமைச்சர்களை விசாரிக்க சிபிஐக்கு தமிழக அரசு அனுமதி!!

குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி ரமணா உள்ளிட்ட 11 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2013-ஆம் ஆண்டு குட்கா,பான் மசாலா போன்ற பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்து இருந்தது. இருப்பினும் சட்ட விரோதமாக குட்கா விற்பனையானது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்தது.

குறிப்பாக இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை டிஜிபி ஆகியோர் லஞ்சம் பெற்றுக்கொண்டு இதற்கு அனுமதி அளித்ததாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது. எனவே குட்கா விவகாரத்தை சிபிஐக்கு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

அதோடு சுமார் 40 கோடி ரூபாய் வரை இதில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறப்படுவதால் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்ய தமிழக அரசிடம் அனுமதி கேட்டு சிபிஐ கடிதம் ஒன்றை சில தினங்களுக்கு முன் எழுதியிருந்தது.

இந்நிலையில் குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி ரமணா உள்ளிட்ட 11 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் சிபிஐக்கு தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top