தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது நீண்ட நாட்களாகவே வாடிக்கையாகி போன விசயமாக பார்க்கப்படுகிறது.
இதற்கு எத்தனை அரசுகள் அமைந்தாலும் தீர்வு கிடைப்பதில்லை இதனால் மீனவர்கள் அடிக்கடி ராமேஸ்வரம், தங்கச்சி மடம் , பாம்பன் பகுதிகளில் போராட்டமும் நடத்தி பார்த்து விட்டனர் ஆனால் எந்த தீர்வும் கிடைப்பதில்லை.
அடிக்கடி இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி வந்ததாக கைது செய்யப்படுவது, மீனவர்களின் வலைகளை அறுத்து விடுவது என தொடர்ந்து நடக்கும் அநியாயங்களின் ஒரு பகுதியாக நேற்றும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
நேற்றும் இப்படியாக மீனவர்கள் ராமேஸ்வரம் மீனவர்கள் 400 பேர் கடலுக்குள் சென்ற நிலையில் அவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டுள்ளனர் அவர்கள் மீது கல்லெறியப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இது சம்பந்தமான வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்கள் மீது கற்களை கொண்டு தாக்கிய இலங்கை கடற்படையினர்… பதைபதைக்கும் வீடியோ காட்சி!#TNFishermen | #SrilankaNavy | #Rameswaram pic.twitter.com/1DWmPV0m1d
— Polimer News (@polimernews) January 6, 2022