தமிழகத்தில் புதிய உருமாறிய AY4.2  கொரோனா இல்லவே இல்லை!!

தற்போது உலகத்தையே மிகவும் அச்சத்தை கொடுத்த நோயாக காட்டுத்தீ போல் பரவியது கொரோனா வைரஸ். இந்த கொரோனா நோயின் தாக்கம் இந்தியாவிலும் கடந்த சில மாதங்களாக அதிகமாக இருந்தது.சுப்பிரமணியன்

இருப்பினும் இந்தியாவின் ஊரடங்கு, தடுப்பூசிகள் போன்ற பல்வேறு முயற்சிகளின் காரணமாக இந்த கொரோனா நோய் தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்தது.இருப்பினும் கொரோனா நோயின் தாக்கம் அதிகரிக்கிறது.

இந்நிலையில் பலருக்கும் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த கொரோனா புதிய உருமாறிய கொரோனாவாக பரவ தொடங்கியதாக கூறப்பட்டது. இந்த புதிய உருமாறிய கொரோனாக்கு AY4.2 என்று பெயர் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்றைய தினம் கர்நாடகத்தில் இவை இரண்டு பேருக்கு கண்டறியப்பட்டன. இது குறித்து நம் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அதன்படி தமிழகத்தில் இந்த உருமாறிய AY4.2  கொரோனா  இல்லை என்று அவர் கூறினார். தமிழகத்தில் பரிசோதித்து பார்த்ததில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் டெல்டா வகை  வைரசால் தான் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் செய்தியாளர்கள் மத்தியில் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment