ஒரு லட்சம் வரை சம்பளத்தில் தமிழக அரசின் கணினி பயிற்றுநர் வேலை!

கணினி பயிற்றுநர் பணிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

a03e97d89308cbb6eaae2d7873c3b5df

மொத்தம் 814 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணியிடத்திற்கு ஊதியம் ரூ. 36,900 முதல் ரூ. 1,16,600 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணைதளத்தில் சென்று 20.03.2019 முதல் 10.04.2019 ஆம் தேதி மாலை 5 வரை விண்ணபிக்கலாம்.

ஆன்லைன் முறையில் நடத்தப்படும் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியான நபர்கள் இந்த பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் முறையில் நடத்தப்படும் தேர்வில் கணினி அறிவியலில் இருந்து 130 வினாக்கள், பொது அறிவில் 10 வினாக்கள் மற்றும் கல்வி உளவியலில் இருந்து 10 வினாக்கள் என மொத்தம் 150 வினாக்கள் கேட்கப்படும்.

இப்பணியிடங்கள் குறித்த முழு விவரங்களும் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. http://trb.tn.nic.in/CI_2019/ci_2019.pdf இந்த இணைப்பில் சென்று இப்பணியிடங்களுக்கான விவரங்களைப் பார்க்கவும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment