
தமிழகம்
இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!!
ரஜினி கமல் தொடங்கி இன்று உள்ள சிறு நடிகர் வரையும் தனது இசையால் கட்டி இழுத்தவர்தான் இசையமைப்பாளர் இளையராஜா. இவர் இசைஞானி இளையராஜா என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார்.
இவர் ஏராளமான படைவங்களில் இசையமைத்தது மட்டுமில்லாமல் பாடலும் பாடியுள்ளார். மேலும் இவருக்கு பின்பு தான் ஏ.ஆர்.ரகுமான், யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் தோன்றினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அம்பேத்கர் மோடி பற்றி கருத்து கூறி சர்ச்சையில் சிக்கியதாக காணப்பட்டது. ஆயினும் அவர் கூறிய கருத்தில் எந்த தவறும் இல்லை என்றும் அதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் அவரது சகோதரர் கங்கை அமரன் கூறி இருந்தார்.
இந்த கருத்து பாஜக தரப்பில் நல் வரவேற்பு பெற்றதாக காணப்பட்டது. இந்த நிலையில் இசைஞானி இளையராஜாவுக்கு இன்றைய தினம் முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஏனென்றால் இசைஞானி இளையராஜா மாநிலங்களவையில் உறுப்பினராய் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். இசையால் நம் உள்ளங்களையும், மாநிலங்களையும் ஆண்டவர் இசைஞானி இளையராஜா என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
