கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்! தமிழ்நாடு கோரிக்கையை ஏற்ற கேரளா!

நம் தமிழகத்தில் தற்போது முதல்வராக உள்ளார் மு.க.ஸ்டாலின். தமிழகத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தமிழக முதல்வர் அண்டை மாநிலமான கேரள முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது.

முல்லை பெரியாறு அணை

அதன்படி முல்லைப்பெரியாறில் பேபி அணையை பலப்படுத்தவதற்கு தடையாக இருந்த மரங்களை அகற்ற கேரளா அனுமதிக்கப்பட்டுள்ளது. பேபி அணைக்கு கீழே உள்ள 15 மரங்களை வெட்ட அனுமதி அளித்த கேரள முதல்வர் பினராய் விஜயன்க்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையில் உள்ள பேபி அணை மற்றும் மண் அணையை வலுப்படுத்த மரங்கள் தடையாக இருந்தன என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தடையை மரங்களை அகற்ற அனுமதிக்கும்படி தமிழ்நாடு விடுத்த கோரிக்கையை நீண்ட காலமாக கேரள வனத்துறை ஏற்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.

முல்லை பெரியாறு அணை

தற்போது தமிழ்நாடு கோரிக்கையை ஏற்று இருப்பது முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு  அமைப்பை வலுப்படுத்த உதவும் என்றும் கூறியுள்ளார். கேரள முதலமைச்சரின் நடவடிக்கைகள் இரு மாநில மக்களுக்கு நீண்டகால பயனளிக்கும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

அணையின் கீழ் பகுதியில் வசிக்கும் கேரள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தமிழ்நாடு அரசு உறுதி அளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print