மத்திய பட்ஜெட் பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் என்ன சொன்னார் தெரியுமா?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழ்நாடு அரசின் சார்பில் ஒன்றிய அரசிடம் கோரிய திட்டங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை. ஒன்றிய நிதி அமைச்சரின் நிதிநிலை அறிக்கை தமிழகம் மற்றும் தமிழக மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. மக்கள் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை என அடைமொழியிட்டு அழைப்பதே பொருத்தமானது. வார்த்தை அலங்காரங்கள் நிறைந்த ஒன்றிய பாஜக அரசின் வழக்கமான நிதிநிலை அறிக்கையாகவே உள்ளது. தமிழ்நாட்டிற்கான புதிய ரயில் திட்டங்கள் மத்திய நிதிநிலை அறிக்கையில் இல்லை. மழை வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடருக்கு கோரிய நிவாரண நிதியும் ஒதுக்கவில்லை” எனது விமர்சித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment