தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி காவிரிநீர்-உச்சநீதிமன்றம் தீர்ப்பு

வெளியானது காவிரி நதி நீர் பங்கீடு குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு.

முக்கிய குறிப்புகள்:

மேல்முறையீடு செய்த மாநிலங்கள்: தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, கர்நாடகம்

விசாரணை செய்த நீதிபதி குழு: தீபக் மிஸ்ரா(தலைமை நீதிபதி), அமித்தவ்ராய், ஏ.எம். கன்வில்கர்(நீதிபதிகள்).

வாதங்கள் முடிவடைந்த தேதி: 20-செப்டம்பர்-2017

தீர்ப்பு வெளியான நாள்: 16-பிப்ரவரி-2018

தீர்ப்பின் முக்கிய சாராம்சம்

காவிரி நதி எந்த மாநிலத்துக்கும் உரிமையானது அல்ல. இது ஒரு தேசிய சொத்து. குடியரசுத் தலைவர் தலைமையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பரிந்துரை.

தமிழகத்துக்கு -177.25 டி.எம்.சி

கேரளம்-30 டி.எம்.சி

புதுச்சேரி-7டி.எம்.சி

முன்னதாக 2007 இல் வெளியான காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி கர்நாடகம் 192டி.எம்.சி தண்ணீரை தமிழகத்துக்கு தர வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது.

கர்நாடகாவின் குடிநீர் தேவைக்காக – 14.75 டிஎம்சி அந்த மொத்த அளவில் இருந்து தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print