10 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்து தற்போது வலிமையான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.
அதிமுக வலிமையான எதிர்க்கட்சியாக இருந்தாலும் கட்சிக்குள்ளேயே பல்வேறு குழப்பங்களும் சோகங்களும் நிலவிக் கொண்டே இருக்கிறது. ஏனென்றால் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா தமிழகத்தில் முதலமைச்சராக இருந்தபோது அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்தார்.
இதனால் அவரின் மறைவிற்குப் பின்னர் அதிமுக பொதுச் செயலாளர் யார் என்ற கேள்வி தற்போது வரை நிலவி வருகிறது. அப்போது சசிகலாவின் தொண்டர்கள் அதிமுக பொது செயலாளர் சசிகலா என்றும் கோஷம் இடுகின்றனர்.
இந்த நிலையில் அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் சில மாதங்களுக்கு முன்பு காலமானார். இதனால் அதிமுக கட்சியில் அவைத்தலைவர் பதவியும் காலியாக இருந்தது. அதனை நிரப்பும் வகையில் தற்காலிக அவைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி அதிமுகவின் தற்காலிக தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மதுசூதனன் மறைவைத் தொடர்ந்து அதிமுக தற்காலிக தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்ட தமிழ்மகன் உசேன் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.