வாட்ஸ் அப்பில் வந்த ஆளுனர் தமிழிசை மெசேஜ்.. அதிர்ச்சியில் பெண் அமைச்சர்!

புதுவை மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பெயரில் வந்த வாட்ஸ்அப் மெசேஜால் புதுவை பெண் அமைச்சர் ஒருவர் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபலங்களின் பெயர்களில் போலியான சமூக வலைதள கணக்கு தொடங்குவது வாடிக்கையாக இருக்கும் நிலையில் புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பெயரிலும் பல போலி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

facebook and whatsappஇந்த நிலையில் புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சராக இருப்பவர் சந்திர பிரியங்கா. இவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு தமிழிசை சௌந்தர்ராஜன் அனுப்பியது போன்ற மெசேஜ் வந்தது அதில் அவசர வேலையாக இருப்பதால் தனக்கு உதவி தேவைப் படுவதாக கூறியிருப்பது போல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக இதுகுறித்து விசாரித்தபோது போலியான கணக்கிலிருந்து வந்த செய்தி என தெரியவந்தது. இது குறித்து அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ள நிலையில் போலீசார் ஆளுநர் பெயரில் வந்த போலியான மெசேஜ் அனுப்பியது யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.