Connect with us

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை கலைஞர் திருத்தியது செல்லும்! 37 ஆண்டு கழித்து வழக்கு தொடர்ந்ததை ஏற்க முடியாது!!

tamilthai 2

செய்திகள்

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை கலைஞர் திருத்தியது செல்லும்! 37 ஆண்டு கழித்து வழக்கு தொடர்ந்ததை ஏற்க முடியாது!!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை கலைஞர் திருத்தியது செல்லும்! 37 ஆண்டு கழித்து வழக்கு தொடர்ந்ததை ஏற்க முடியாது!!

தமிழக அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்திற்கு அனைவரும் அறிந்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. அதோடு மட்டுமல்லாமல் கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் தமிழ் தாய் வாழ்த்து கட்டாயம் பாட வேண்டும் என்றும் கூறியிருந்தது.

இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பல வருடங்களுக்கு முன்பே திருத்தி அமைத்து இருந்தார். இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை கலைஞர் திருத்தியது செல்லும் என்று அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை கலைஞர் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடியானது. மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்தில் சில வரிகளை நீக்கியதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது.

ஜெபமணி ஜனதா கட்சியின் பொது செயலாளர் மோகன்ராஜ் கடந்த 2007ஆம் ஆண்டில் வழக்கு தொடர்ந்தார். 1970ஆம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தத்தை எதிர்த்து 37 ஆண்டுகளுக்கு வழக்கு தொடர்ந்ததை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மோகன்ராஜ் வழக்கை  தள்ளுபடி செய்தது தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாற்றி அமைக்க அரசுக்கு உரிமை உள்ளது என்று ஐகோர்ட்டில் அரசு வழக்கறிஞர் வாதம் புரிந்தார். பாடலுக்கான காப்புரிமை மனுதாரரிடம் இல்லை வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார் எனவும் வழக்கறிஞர் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top