Connect with us

தமிழுக்கு இவ்வளவு முக்கியத்துவமா? அனைத்து செய்தி ஊடகங்களுக்கு தமிழ் உச்சரிப்பு வகுப்புகள்…!!

tamill

தமிழகம்

தமிழுக்கு இவ்வளவு முக்கியத்துவமா? அனைத்து செய்தி ஊடகங்களுக்கு தமிழ் உச்சரிப்பு வகுப்புகள்…!!

தமிழுக்கு இவ்வளவு முக்கியத்துவமா? அனைத்து செய்தி ஊடகங்களுக்கு தமிழ் உச்சரிப்பு வகுப்புகள்…!!

இன்றைய தினம் சட்டப்பேரவையில் தொழில்துறை மற்றும் கனிமவளத் துறை சார்பில் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதில் தமிழ்மொழி வளர்ச்சிக்காக பல்வேறு விதமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாக தெரிகிறது.

அதன்படி தமிழ் ஆர்வத்தை அதிகரிக்க போட்டிகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மாணவர்களின் தமிழ் ஆர்வத்தை அதிகரிக்க அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தமிழ் சார்ந்த போட்டிகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சார்ந்த போட்டிகள் நடத்த மொத்தம் ரூபாய் 5.35 கோடி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் பண்பாட்டு மரபுகள் ஆவணப்படுத்தப்பட்டு மீட்டுருவாக்கம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் பண்பாட்டு மரபுகள் ஆவணப்படுத்தப்பட்டு மீட்டுருவாக்கம் செய்ய ரூபாய் 2.17 கோடி வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். திருக்குறளுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெறும் வகையில் பாரிசில் உள்ள அரங்கத்தில் திருக்குறள் மாநாடு நடத்தப்படும் என்றும் கூறினார்.

திருக்குறள் மாநாடு நடத்தி ரூபாய் ஒரு கோடி நிதி உதவி வழங்கப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். அனைத்து ஊடகங்களுக்கும் செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் தமிழ் உச்சரிப்பு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top