Connect with us

தமிழகம், கேரளா கல்வியில் சிறந்து விளங்குகிறது!!: நீதிபதிகள்

மாணவர்

தமிழகம்

தமிழகம், கேரளா கல்வியில் சிறந்து விளங்குகிறது!!: நீதிபதிகள்

வட இந்தியாவோடு ஒப்பிட்டால் தென்னிந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கல்வி அறிவானது சற்று அதிகமாக காணப்படும். குறிப்பாக தமிழகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கல்வியறிவு சற்று அதிகமாக இருக்கும்.

இந்த நிலையில் தமிழகம் மற்றும் கேரளா கல்வியில் சிறந்து விளங்குகிறது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். இவ்விரு மாநிலங்களில் கல்விக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என்றும் இதனால் அங்கு கல்வியறிவில் சிறந்து விளங்குகிறது என்றும் கூறினர்,

கல்வி அறிவில் சிறந்து விளங்குவது தமிழகம், கேரள மாநில அரசுகளின் சாதனை என்று தலைமை நீதிபதி அமர்வு கூறினார். பல மாநிலங்கள் கல்வியில் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றன என்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கூறினர்.

தமிழக அரசு பள்ளிக் குழந்தைகள் இடைநீற்றலை கருத்தில் கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். 6 முதல் 18 வயதை உடைய இடை நின்ற மாணவர்கள் குறித்த புள்ளிவிபரத்தை அறிக்கையாக தர மனுதாரருக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இடைநீற்றலை தடுக்க கோரி மதுரை முத்து செல்வம் கொடுத்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. உண்மையில் குழந்தைகள் பள்ளி இடைநீற்றல் என்பது மிக பெரும் பிரச்சனை என்றும் ஹை கோர்ட் கிளை நீதிபதிகள் கூறினர். குழந்தை தொழிலாளரை மீட்கும் அதே நேரத்தில் அவர்களின் குடும்பத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறினர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top