மக்களே உஷார்!! தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெளுக்கப்போகும் கனமழை!!

தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது.

இன்று ஒரு நாள் மட்டும்!! இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

இதன் காரணமாக வட தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் அடுத்த 5 நாட்களுக்கு வட தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

3 மணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை! வானிலை அப்டேட்!!

மேலும், மீனவர்களுக்கான எச்சரிக்கை பொறுத்தவரையில் ஏதுமில்லை என்று வானிலை மையம் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.