Connect with us

குஷியோ குஷி..!!! தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெளுக்கப்போகும் கனமழை..!!!

rain 2

தமிழகம்

குஷியோ குஷி..!!! தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெளுக்கப்போகும் கனமழை..!!!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. அதன் படி நீலகிரி, தேனி, கோவை, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னையை பொருத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 9-ம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடாவில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தென்மேற்கு வங்கக்கடல், லட்சத்தீவு, கேரளா, கர்நாடகா கடலோரப் பகுதிகள், மத்திய கிழக்கு அரபிக்கடலில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. மணிக்கு 45 முதல் 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் இன்று முதல் 5 நாட்களுக்கு மீனவர்கள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top