சென்னையில் மழை தொடருமா? தமிழ்நாடு வெதர்மேன் டுவிட்!

சென்னையில் மேலும் மழை தொடருமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்த நிலையில் நேற்று இரவு திடீரென சென்னையில் கனமழை பெய்தது. இதனால் சென்னை மக்கள் மீண்டும் மழை நீரில் தத்தளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னையில் மீண்டும் கனமழை பெய்ய அதிக வாய்ப்பில்லை என்றும் சென்னையில் படிப்படியாக மழை குறைந்து சூரியன் தெரிய தொடங்கி விடும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முதலில் கடலோர பகுதியில் சூரியன் தோன்ற ஆரம்பிக்கும் என்றும் அதன் பின்னர் படிப்படியாக உள் பகுதிகளிலும் சூரியன் தோன்ற ஆரம்பித்து விடும் என்றும் அதனால் மழை படிப்படியாக குறையும் என்றும் ஆறுதலாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவர்கள் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment