200 வருடங்களில் அதிகமழை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

200 வருடங்களில் இல்லாத கனமழை சென்னையில் பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக சென்னையில் மிக கனமழை பெய்து வருகிறது என்பதும் இதனால் சென்னையில் உள்ள தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் சூழ்ந்து உள்ளன என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் அடுத்தடுத்து தோன்றிய மூன்று காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் 200 வருடங்களில் மிக அதிக மழை தற்போது பெய்து உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்

கடந்த 200 வருடங்களில் இதுவரை 4 முறை மட்டுமே சென்னையில் 1,000 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளதாகவும் தற்போது சென்னையில் 1000 மில்லி மீட்டர் மழை வருவதற்கு இன்னும் 70 மில்லி மீட்டர் மழை மட்டுமே தேவைப்படுவதாகவும் அதுவும் இன்னும் ஓரிரு நாளில் பெய்துவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

200 வருடங்களில் இல்லாத அளவுக்கு மிக கனமழை சென்னையில் பெய்து உள்ளது என்ற தகவல் சென்னை மக்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment