சென்னையில் இன்று இரவு கனமழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

சென்னையில் இன்று இரவு முதல் நாளை காலை வரை கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் கடந்த சில நாட்களாகவே சென்னை கனமழை குறித்தும் தமிழ்நாட்டில் நிலவும் தட்பவெட்ப நிலை குறித்தும் பதிவு செய்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சற்று முன்னர் அவர் தனது டுவிட்டரில் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று இரவு முதல் நாளை காலை வரை கனமழை பெய்யும் என்றும் அதனால் இந்த நான்கு மாவட்ட மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளார்.

மேலும் கடந்த முறை அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வல் பெய்த மழை போல் இன்று பெய்யும் மழை இருக்கும் என்றும் 50 மில்லி மீட்டர் முதல் 100 மில்லி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

எனவே மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அந்தந்த மாவட்டங்களின் நிர்வாகம் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment