சென்னையில் 4வது முறையாக 1000மிமீ மழை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

சென்னையில் கடந்த 200 ஆண்டுகளில் ஏற்கனவே 3 முறை 1000 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்த நிலையில் இந்த ஆண்டும் 1,000 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்து உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

சென்னையில் நேற்று இரவு ஏழு முப்பது மணி வரை 1003 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சென்னையில் 1918, 2005, 2015 ஆகிய ஆண்டுகளில் 1,000 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது என்ற விபரத்தை தமிழ்நாடு வெதர்மேன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் கூறியதாவது: சென்னையில் இதற்கு முன் 1000 மிமீ மழை பெய்த ஆண்டுகளின் விபரங்கள்:

கடந்த 1918ம் ஆண்டு நவம்பர் மாதம் 1088 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது

2005ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1078 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது

2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1049 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது

அதன்பிறகு தற்போது இந்த ஆண்டு இதுவரை 1003மிமீ மழை பெய்துள்ளது என்பதும் இந்த ஆண்டு 1918ஆம் ஆண்டின் மழை அளவை முறியடிக்க வாய்ப்பு உள்ளது’ என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment