Connect with us

இந்த ஒரு போட்டியால் சர்வதேச கவனம் பெறப்போகும் தமிழ்நாடு.!! எப்படின்னு தெரியுமா?

chess olympiad

தமிழகம்

இந்த ஒரு போட்டியால் சர்வதேச கவனம் பெறப்போகும் தமிழ்நாடு.!! எப்படின்னு தெரியுமா?

இந்தியாவிலேயே முதல்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நம் சென்னை மாநகரில்தான் நடைபெற உள்ளது. இதனால் நம் தமிழகம் விளையாட்டு அளவில் முன்னேறி உள்ளதாக தெரிகிறது.

இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அதன்படி சென்னை நுங்கம்பாக்கத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இதழ் சார்பில் நடைபெறும் மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர் மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த பிரமாண்டமான அரங்கம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். ஜல்லிக்கட்டு போட்டிக்கான அரங்கம் அமைப்பதற்காக அடுத்த ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்கும் என்றும் கூறினார்.

மேலும் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியால் நம் தமிழகம் சர்வதேச கவனம் பெறப்போகிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். விளையாட்டு துறையை பொறுத்தவரை தமிழக அரசுக்கு ஏராளமான கனவுகள் உள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top