Connect with us

5 மாவட்டங்களில் தமிழகத்தில் கனமழை பெய்யும் – வானிலை அப்டேட்!!

rain 7

தமிழகம்

5 மாவட்டங்களில் தமிழகத்தில் கனமழை பெய்யும் – வானிலை அப்டேட்!!

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை பெய்து வரும் நிலையில் இன்றைய தினத்தில் 5 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

இதனிடையே நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

அதே போல் தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னையை பொறுத்த வரையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்த நிலையில் தற்போது மழை பெய்து குளுகுளுவென சூழல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top