
Tamil Nadu
இந்தியாவின் ஆன்மிக தலைநகர் தமிழ்நாடு; ஆளுநர் ஆர்.என்.ரவி காரசார பேச்சு!!
இந்தியாவின் ஆன்மிக தலைநகராக தமிழ்நாடு விளங்குகிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இமேஜ் ஆடிட்டோரியத்தில் 12- வது இந்திய மீன்வளம் மற்றும் மீன்வள கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஆளுநர் ஆர்.என் ரவி நாம் மிக அழகான மாநிலத்தில் இருக்கிறோம் தமிழ்நாடு தான் இந்தியாவின் ஆன்மீக தலைநகரம் என கூறியுள்ளார். இந்தியாவுக்கான சிந்தனைகளை வழங்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதாக கூறினார்.
இந்நிலையில் அடுத்த 25 ஆண்டுகளில் எப்படி இருக்கவேண்டும் என்ற இலக்கோடு இந்தியா தற்போது செயல்படத் தொடங்கியுள்ளதாக ஆளுநர் ஆர்.என் ரவி கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
