Connect with us

ஷாக் நியூஸ்!! தமிழ்நாடு ஆசிரியர் சங்க தலைவர் பி.கே.இளமாறன் மறைவு..

Ilamaran

தமிழகம்

ஷாக் நியூஸ்!! தமிழ்நாடு ஆசிரியர் சங்க தலைவர் பி.கே.இளமாறன் மறைவு..

கடந்த சில நாட்களாகவே அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில்
தமிழ்நாடு ஆசிரியர் சங்க தலைவர் பி.கே.இளமாறன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வியாசர்பாடியை சேர்ந்த இளமாறன் கொடுங்கையூர் அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சென்னை வியாசர்பாடியில் உள்ள அவருடைய இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஆசிரியர் இளமாறன் உடல் வைக்கப்பட்டுள்ளது. இவரது மறைவிற்கு ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இவரது மறைவிற்கு பல கட்சி தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top