உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்கள்- மீட்க குழு! குழுவில் யார் யார்?
உக்ரைன் நாட்டில் 40க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த 40க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் பெரும்பாலும் இந்தியர் மாணவர்களாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏனென்றால் இந்தியாவைக் காட்டிலும் உக்ரைன் நாட்டில் மருத்துவ படிப்புக்கான செலவு குறைவுதான். இவ்வாறு உள்ள நிலையில் உக்ரைன் மீது திடீரென்று ரஷ்யா போர் புரிந்து கொண்டு வருகிறது.
இதனால் அங்குள்ள இந்திய மாணவர்கள் விமானங்கள் மூலமாக நாடு திரும்புகின்றனர். இந்த நிலையில் உக்ரேனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்கும் பல்வேறு நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது.
அதன் ஒரு கட்டமாக அவர்களை மீட்க குழு ஒன்று அமைக்கப் பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி உக்ரேனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்க குழுவை அமைத்தது தமிழக அரசு.
முதல்வர் கேட்டுக் கொண்டதை அடுத்து மத்திய அரசு சார்பில் ஒருங்கிணைப்பு அலுவலராக ராஜாராமன் நியமனம் செய்துள்ளார். இந்திய தூதரகங்கள் உடன் இணைந்து நடவடிக்கை எடுக்க எம்பிக்கள் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்எம் அப்துல்லா, ராஜா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது. எம்பிக்கள் குழுவுடன் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு சார்பில் நான்கு IAS அதிகாரிகளும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
உக்ரைன் மேற்குப் பகுதியில் அதிகளவுள்ள நிலையில் தமிழக மாணவர்களை மீட்க குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு கூறியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 2223 மாணவர்களில் இதுவரை 193 மாணவர் மட்டும்தான் தாயகம் திரும்பியுள்ளனர் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
