வெளிமாநிலங்கள் கிடையாது; நேரடியாகவே வெளிநாடுகளுடன் ஒப்பிட்டு தமிழ்நாடு வளர வேண்டும்!: முதல்வர்

நம் தமிழ்நாட்டில் தற்போது முதல்வராக உள்ளார் மு.க.ஸ்டாலின். அவர் தினந்தோறும் புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்த சூழ்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பல வளர்ச்சிக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

மு க ஸ்டாலின்

அந்தப்படி வெளிநாடுகளுடன் ஒப்பிட்டு தமிழ்நாடு வளர வேண்டும் என்று அவர் கூறினார். வெளி மாநிலங்களுடன் ஒப்பிடாமல் வெளிநாடுகளுடன் ஒப்பிட்டு தமிழகம் வளர்ச்சி அடைய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

அனைத்து துறை செயலாளர்கள் உடனான ஆய்வு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு பேசினார். தமிழகம் வளர்ச்சி இலக்கை பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் பெருமை கொள்வது மட்டுமே போதாது என்றும் வளர்ந்த நாடுகளை விட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட்டு நமது இலக்கை ஏற்படுத்தி அதை அடைய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பான கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

அடுத்த ஆண்டுக்கான திட்டங்களுக்கு இந்த ஆண்டே முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். ஒன்றிய அரசிடம் இருந்து பெற வேண்டிய நிதியை கேட்டுப் பெறத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட்டு அதற்கேற்ப தமிழ்நாடு வளர்ச்சி அடைய இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். வளர்ந்த நாடுகள் தெற்காசிய நாடுகளுக்கு இணையான வளர்ச்சியை நாம் பெற முயற்சிக்க வேண்டும் என்றும் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment