வளர்ச்சியில் தமிழ்நாடு தான் முதல் இடத்துக்கு வரவேண்டும்!: முதல்வரின் விருப்பம்;

இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் இன்னுயிர் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்தார். இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் விபத்தில் சிக்கியவர்களுக்கு முதல் 48 மணி நேரம் ஆகும் செலவை தமிழக அரசு ஏற்கும் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

இன்னுயிர் காப்போம் திட்டம்

நாட்டுக்கே பெருமை சேர்க்கும் வகையில் தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு முதலிடத்தில் இருக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார் ஸ்டாலின் பேசினார்.

இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என ஸ்டாலின் கூறினார். இளைஞர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் செல்ல வேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

காரில் பயணம் செய்யும்போது சீட் பெல்ட் அணிய வேண்டும்; சாலை விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார். சாலை விதிகளை கடைபிடிப்பதன் மூலம் தனிமனித சமூக கடமை வெளிப்படுகிறது என்றும் ஸ்டாலின் கூறினார்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment