ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் ஒவ்வொரு பிரிவின் கீழும் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். இந்த நிலையில் சுகாதாரத்துறைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. இதில் நம் தமிழகத்திற்கு இரண்டாம் இடம் கிடைத்து சாதனை படைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
நீதி ஆயோக் வெளியிட்ட சிறந்த சுகாதாரத்துறை தரவரிசைப் பட்டியலில் தமிழகம் 2வது இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தில் அண்டை மாநிலமான கேரளா இடம்பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தினை தெலுங்கானா, நான்காவது இடத்தை ஆந்திரப்பிரதேச மாநிலமும் வரிசையாக பிடித்துள்ளன.
இந்த பட்டியலில் இறுதி இடத்தினை பெற்று மிக மோசமான செயல்பட்ட மாநில சுகாதாரத் துறைக்கான கடைசி இடம் உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு கிடைத்துள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் கடும் சவால்களை எதிர்கொண்டு, மழைக்காலங்களில் சிறப்பாக செயல்பட்டதற்காக சுகாதாரத்துறைக்கான பட்டியலில் நம் தமிழகத்திற்கு இரண்டாம் இடம் கிடைத்தது பலருக்கும் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.