தமிழக, புதுச்சேரி மாணவர்களை விரைவில் மீட்க வேண்டும்! பாதுகாப்பில்லாத இடத்தில் மாணவர்கள் தஞ்சம்: ஓபிஎஸ்
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் புரிந்து கொண்டு வருகிறது. இதனால் உக்ரைனில் உள்ள மக்களை மீட்க ஒவ்வொரு அரசும் முயற்சி செய்து வருகிறது. நம் இந்தியாவும் சில மாணவர்கள், மக்களை விமானத்தின் மூலமாக அழைத்துக் கொண்டு வருகிறது.
இது குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். அந்த வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இது பற்றி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். முன்னதாக அவர் இன்று காலை சென்னை புழல் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்து வந்தார்.
அதன் பின்னர் ஜெயக்குமாருக்கு மார்ச் 11ஆம் தேதி வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் தற்போது உக்ரைனில் தமிழக மாணவர்கள் சிக்கியுள்ளதாக அவர்களை விரைவில் மீட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
அதன்படி உக்ரைன் நாட்டில் போர் நிலவி வருவதால் அங்கு சிக்கியுள்ள தமிழகம், புதுச்சேரி மாணவர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அதிமுகவினர் ஓ.பன்னீர்செல்வம் இவ்வாறு கோரிக்கை வைத்துள்ளார். உக்ரைன் நாட்டில் பாதுகாப்பில்லாத இடங்களில் மாணவர்கள் பலரும் தஞ்சம் அடைந்துள்ளதாக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
