ஐபிஎல் ஏலத்தையும் விடாமல் ஆதிக்கம் செய்யும் தமிழக வீரர்கள்; எத்தனை வீரர்கள் ஏலத்தில் விட வாய்ப்பு?

நடப்பாண்டிற்கான ஐபிஎல் போட்டியில் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. இதில் புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய இரண்டு அணிகள் களம் இறங்கியுள்ளன. இந்த நிலையில் நடப்பாண்டிற்கான ஐபிஎல் வீரர்கள் ஏலம் எப்போது என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இன்றைய தினம் ஐபிஎல் ஏலம் தொடங்குகிறது.

அதன்படி பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் தொடங்குகிறது. இதில் மொத்தம் 600 வீரர்கள் பங்கேற்று உள்ளதாக தகவல் கிடைத்தது. குறிப்பாக ஜூனியர் உலக கோப்பையை பெற்றுக்கொடுத்த இந்திய வீரர்களும் இதில் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில் ஏலப்பட்டியலில் தமிழக வீரர்களின் பங்கு பெரிதாகக் காணப்படுகிறது. அதன் படி ஏலப்பட்டியலில் தமிழக வீரர்கள் 30 பேர் இடம் பெற்றுள்ளனர். ஐபிஎல் ஏலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 30 கிரிக்கெட் வீரர்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி சுழல் பந்துவீச்சாளர்கள் ரவிச்சந்திர அஸ்வின், மற்றும் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளனர். விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் ஏலம் விடப்படுகின்றனர். வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், ஆல்ரவுண்டர் சாருக் கான் உள்ளிட்டோர் ஏலம் விடப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.