44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று கோலாகலமாக சென்னை மாமல்ல புரத்தில் தொடங்கியது. அதன் படி, இன்று இந்திய அணி 2-வது சுற்றில் களம் இறங்கியது.
அந்த வகையில் இன்றைய தினத்தில் இந்தியாவின் 3-வது அணிக்காக விளையாடிய தமிழ்நாட்டைச் சேர்ந்த கார்த்திகேயன் முரளி மெக்ஸிகோ வீரர் யூரியோ செப்போவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
குறிப்பாக 30-வது நகர்த்தலில் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் இந்திய வீராங்கனை பிரிவில் விளையாடிய நந்திதா வெற்றியடைந்துள்ளார். அதாவது சிங்கப்பூர் அணிக்கு எதிராக இந்தியாவின் மூன்றாவது சுற்றில் களமிறங்கி அவர் வெற்றி பெற்றுள்ளார்.
இவர் 34-வது நகர்த்தலின் போது தனது வெற்றியை பதிவு செய்துள்ளார். இந்திய அணி சார்பில் விளையாடிய இரண்டு வீரர்கள் வெற்றி கண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.