TET தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு; தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக மாணவர்கள் தேர்வாணையருக்கு தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் மார்ச் மாதத்திற்கு முன்னரே மறுதேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக தேர்வுகளானது பிப்ரவரி முதல் ஏப்ரல் 2023 வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் வரும் பிப்ரவரி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் TET எழுத்துத் தேர்வானது நடைபெறுகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக மாணவர்கள் TET தேர்வு எழுதுவதாக இருப்பின், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், சைதாப்பேட்டை என்ற முகவரிக்கு TET தேர்வுக்கு விண்ணப்பித்த சான்றுடன் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அவ்வாறு தெரிவித்த மாணவர்களுக்கு 19.03.2023 ஞாயிற்றுகிழமை அன்று அதே தேர்வு மையங்களில் தனித்தேர்வுகள் நடைபெறும் என்றும், தகவல் தெரிவிக்காதவர்கள் TET தேர்வு எழுதுவதாக இருந்தால் பல்கலைக்கழகத்தால் மாற்று ஏற்பாடுகள் செய்ய இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.