News
தமிழ்நாடு 7ஆம் தேதி! நாங்க கேரளாவில 9ஆம் தேதி! அதிரடி முயற்சி!!
நம் இந்தியாவில் பல நட்பு மாநிலங்கள் காணப்படுகின்றன. உதாரணமாக புறப்பட வேண்டுமென்றால் தமிழ்நாடும் கேரளாவும் நட்பு மாநிலங்களாக தற்போது வரை உள்ளது. இதனை காணும் பிற மாநிலங்களும் பொறாமைப்படும் அளவிற்கு நட்பு மாநிலங்களாக தொடர்ந்து பல ஆண்டுகள் வரை காணப்படுகிறது. தமிழகத்தில் ஒன்று நடந்தால் கேரளாவில் அது தொடர்ந்து அதைப்போன்றே உத்தரவுகளும் காணப்படும் என்பது தவிர்க்க முடியாத உண்மையாக காணப்படுகிறது. மேலும் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதே தினம் கேரளாவிலும் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நம் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது அதனை கண்ட கேரளா அரசும் அங்கும் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தியது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது முழு நேர ஊரடங்கு மிகவும் கடுமையாக காணப்படுகிறது. மேலும் தமிழகத்தில் இதனை அறிவித்தார் புதிதாக ஆட்சியில் அமர்ந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின். ஆனால் கேரளாவில் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற கூட்டணியே இந்த முறையும் வெற்றி பெற்று மேலும் முதல்வராக தொடர்கிறார் பினராயி விஜயன்.
இந்த சூழலில் தமிழகத்தில் ஜூன் 7ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது கேரள அரசும் ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கேரளாவில் ஜூன் 9ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு கூறியுள்ளது. மேலும் கேரளாவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் இத்தகைய ஊரடங்கி ஜூன் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
