தமிழகத்திற்கு தினமும் 10,000 டன் நிலக்கரி தேவை! மத்திய அரசிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி கோரிக்கை;

தற்போதைய ஆட்சியில் தமிழகத்தின் மின்சாரத்துறை அமைச்சராக உள்ளார் செந்தில்பாலாஜி. அவர் தமிழகத்தில் ஏற்படும் மின்வெட்டு ,மின் தடை பற்றி சட்டப்பேரவையில் புள்ளிவிபரங்களோடு பேசியிருந்தார். இதனால் எதிர்க்கட்சியினர் திரும்ப கேட்கும் அளவிற்கு முடியாத விதமாக அனைத்து புள்ளி விவரங்களை பட்டியலிட்டு சட்டப்பேரவையில் கூறினார்.

இந்த நிலையில் அவர் தமிழகத்திற்கு தினமும் 10 ஆயிரம் டன் நிலக்கரி தேவை என்று கூறியுள்ளார். அதன்படி தமிழகத்திற்கு தினமும் 10 ஆயிரம் டன் நிலக்கரி ஒதுக்க மத்திய அரசிடம் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கோரிக்கை வைத்துள்ளார்.

மத்திய அரசின் நிதி நிறுவனங்களில் இருந்து பெறக்கூடிய கடனுக்கான வட்டியை 8.5 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். டெல்லியில் மத்திய மின்சார அமைச்சர் ஆர்.கே.சிங்கை நேரில் சந்தித்து தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கோரிக்கை வைத்தார். மத்திய அரசின் மின் வினியோக நிர்வாண சேவை கட்டணத்தை யூனிட்டுக்கு ஒரு பைசாவாக குறையுங்கள் என்றும் மின்வாரியத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கோரிக்கை வைத்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment