திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் என்பதும் அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை வழங்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்றதை அடுத்து அமைச்சரவையில் அதிரடியாக சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை பொறுப்பு வகித்த சில துறைகள் சில அமைச்சர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு வேறுசில அமைச்சரிடம் வழங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த முழு விவரங்கள் இதோ:
அமைச்சர் பெரிய கருப்பன்: இதுவரை ஊரக வளர்ச்சித்துறை, இனிமேல் கூட்டுறவுத்துறை
அமைச்சர் ஐ பெரியசாமி: இதுவரை கூட்டுறவுத்துறை, இனிமேல் ஊரக வளர்ச்சித்துறை
அமைச்சர் ராமச்சந்திரன்: இதுவரை வனத்துறை, இனிமேல் சுற்றுலாத்துறை
அமைச்சர் மதிவேந்தன்: இதுவரை சுற்றுலாத்துறை, இனிமேல் வனத்துறாஇ
அமைச்சர் பிடிஆர் பழனிவேல்: நிதி அமைச்சகத்தோடு கூடுதலாக புள்ளியியல் துறை ஒதுக்கீடு
அமைச்சர் சேகர்பாபு: இந்து சமய அறநிலையத்துறையோடு கூடுதலாக சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்துறை ஒதுக்கீடு