Connect with us

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு..! அடுத்த கூட்டத்தொடர் எப்போது தெரியுமா?

202102031145476539 Tamil Nadu Legislative Assembly adjourned till tomorrow SECVPF

தமிழகம்

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு..! அடுத்த கூட்டத்தொடர் எப்போது தெரியுமா?

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு..! அடுத்த கூட்டத்தொடர் எப்போது தெரியுமா?

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான கூட்டத்தொடரானது சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட் மீதான கூட்டதொடர்  விவாதம் நடைபெற்றது.

இதில் 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் தள்ளுபடியான 5.48 லட்சம் பேருக்கு நகைகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக நேற்று ஆயிரம் கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டதாக கூட்டுறவு  துறை அமைச்சர்  தெரிவித்தார்.

வருகின்ற 5 ஆண்டுகளில் 1000 கோடி ரூபாய் செலவில் அரசு கல்லூரிகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்படுவதாகவும் அரசுப்பள்ளியில் 10ம் வகுப்பு முடித்து பாலிடெக்னிக் கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என நிதி அமைச்சர் தெரிவித்தார்.

இதனிடையே 19 சட்ட மசோதாக்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் இந்த மசோதாக்கள் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரிடம் நிலுவையில் உள்ளதாக சட்டமன்ற விவாதத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்து, தற்போது  ஒத்திவைக்கப்படுவதாக  சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.  மேலும், பட்ஜெட் கூட்டத்தொடர் மீண்டும் எப்போது நடைபெறும் என குறிப்பிடவில்லை.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top