எங்கும் ஜொலிக்கும் தமிழக வீரர்கள்! கர்நாடகாவை வீழ்த்தி வெற்றி நடைபோடும் தமிழ்நாடு!!

சையது முஷ்டாக் அலி கோப்பையின் வெற்றி முகத்தோடு தமிழக அணி ஜொலித்துக் கொண்டு வருகிறது. ஏனென்றால் தொடர்ந்து 2 முறை தமிழக அணி சையது முஷ்டாக் அலி கோப்பையை வென்றுள்ளது.

விஜய் ஹசாரே

இந்த நிலையில் தற்போது தமிழகத்தின் கை விஜய் ஹசாரா கோப்பை தொடரிலும் ஓங்கிய காணப்படுகிறது. இந்த விஜய் ஹசாரே கோப்பை 50 ஓவர் போட்டியாகும். இதில் தமிழ்நாடு-கர்நாடகா பலப்பரீட்சை மேற்கொண்டது.

இந்த ஆட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. கர்நாடக அணியின் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால் தமிழக அணியின் பந்துவீச்சை கர்நாடக வீரர்கள் சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் சுருண்டு விழுந்தனர்.

கர்நாடக அணி சார்பில் அதிகபட்சமாக மணிஷ் பாண்டே 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.  வெறும் 123 ரன்களில் கர்நாடக அணி சுருண்டது. தமிழக அணி சார்பில் அதிகபட்சமாக சித்தார்த் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதன் பின்னர் களமிறங்கிய தமிழக அணி வீரர் பாபா இந்திரஜித்தின் அரை சதத்தின் மூலம் வெறும் 20 ஓவர்களில் ஆட்டத்தை முடித்தது தமிழக அணி. இதனால் விஜய் ஹசாரா தொடரில் வெற்றி நடை போட்டுக் கொண்டு தமிழக அணி ஜொலித்துக் கொண்டு வருகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment